கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது கே.என்.நேருவின் குடும்ப கல்லூரி கடனில் தத்தளித்ததாக கூறப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் அமைச்சர் கே.என்.நேரு வாரிக் குவித்ததாக அவருக்கு நெருக்கமானவர்களே கூறிவந்தனர்.

இந்த நிலையில்தான், சென்னையில் ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. ஆழ்வார்பேட்டையில் அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.,யுமான அருணுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி தில்லைநகரில் அமைச்சர் நேருவின் மகன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal