‘‘முதலமைச்சர் மருந்தகம் மக்களுக்காகவா? ஸ்டாலின் விளம்பரத்திற்காகவா?அம்மா திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் ஸ்டாலின் அரசிற்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகிவிட்டனர்’’ அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியதோடு, கடும் குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘புரட்சித்தலைவி அம்மா ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கிட கடந்த 2014 ஆம் ஆண்டு அம்மா மருந்தகத்தை தமிழகம் முழுவதும் திறந்து வைத்தார் ,தொடர்ந்து 131 அம்மா மருந்தகம் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்றனர்.

அதனை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா மருந்தகத்தை மூட நடத்த திட்டமிட்டனர் .இதனை தொடர்ந்து கடந்த 20.11. 2021 ஆம் ஆண்டு எடப்பாடியார் இது குறித்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டு, ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் அம்மா மருந்தகத்தை மூட ஸ்டாலின் அரசு முயற்சி செய்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டினார் ஆனால் இதற்கு அப்போது அரசின் சார்பில் அம்மா மருந்தங்களை நாங்கள் மூட மாட்டோம் எண்ணிக்கை அதிகப்படுத்துவோம் என்று கூறினார்கள். இந்த நான்காண்டுகளில் எத்தனை அம்மா மருந்தங்களை அதிகப்படுத்தியுள்ளார்கள் என்று கூற முடியுமா?

அது மட்டுமல்ல இன்றைக்கு அம்மா மருந்தகத்திற்கு தேவையான மருந்துகளை சப்ளை செய்யாமல் அதை மெல்ல மெல்ல மூடு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர், தற்போது ஸ்டாலின் 1000 முதல்வர் மருந்தகத்தைதிறந்து வைத்துள்ளார், குறிப்பாக இதற்கு 38 மாவட்டங்களில் கிடங்குகள் அமைக்கப்பட்டு மூன்று மாத தேவையான மருந்துகள் பராமரிக்கப்படும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்கள், ஆனால் இந்த மருந்தகங்களில் சர்க்கரை நோய் ,பிரஷர் உள்ளிட்ட சில நோய்களுக்கு மட்டும்தான் மருந்துகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இன்றைக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 1,150 நோய்கள் உள்ளது அதுமட்டுமல்ல அது நீண்ட நாள் மருந்துகள் எடுக்கக்கூடிய புற்றுநோய், இதய நோய், தைராய்டு போன்ற நோய்களுக்கு மருந்து உள்ளதா ?ஆனால் மக்கள் பெரும்பாலான மருந்துகள் இல்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஆயிரம் முதல்வர் மருந்தகம் என்று ஸ்டாலின் பெருமையாக பேசி வருக்கிறார் அப்படி என்றால் இந்த திட்டம் தொடங்கி இதுவரை எத்தனை நோய்களுக்கு மக்கள் பயன்பெற்றனர் குறிப்பாக கிராமப்புறங்களில் மக்கள் இதில் பயன்பெற்றார்களா என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் விஷக்கடிகள்,ரேபிஸ் உள்ளிட்ட நோய் தடுப்பு மருந்து உள்ளதா? என்பதை குறிப்பிட வேண்டும்.

எடப்பாடியார் கிராமப்புற மக்கள் பயன் பெறும் வகையில் 2000 அம்மா மினிகிளினிக் திறந்து வைத்தார், இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பயன்பட்டனர் அதை மூடுவிழா நடத்தி விட்டு மக்களை தேடி மருத்துவம் என்று திட்டத்தை அறிமுகப்படுத்தினீர்கள் ஆனால் அந்த திட்டத்தில் ஒரு நபர் பயன்பெற்றால் அதை மூன்று பேர் பயன்படுவதாக கணக்கு எழுதப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அம்மா உணவகம் அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், என்று அனைத்தையும் மூடுவிழா நடத்திவிட்ட ஸ்டாலின் திமுக அரசு ,தற்போது அம்மா மருந்தகத்தை மூடிவிழா நடத்தியலாம் என்று நினைக்கிறார், உங்கள் ஆட்சிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மூடுவிழா நடத்த தயாராகிவிட்டனர் மீண்டும் எடப்பாடியாரை முதலமைச்சராக மக்கள் நாள் குறித்து விட்டனர்’’ என அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal