பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பதில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பி.ஜே.பி.யின் இப்தார் நோன்பில் கலந்துகொள்வதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி சார்பில் வருகிற மார்ச் 25ம் தேதி புனித ரமலான் இப்தார் நோன்பு நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்துக்கு பி.ஜே.பி. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பா.ஜ.க. நிர்வாகிகளான கரு.நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி, வேலூர் இப்ராஹிம், டெய்சி தங்கையா, பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கலந்துகொண்டனர். அழைப்பிதழ் வழங்கும் போது, ஓ.பி.எஸ். மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் உடன் இருந்தார்.