அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எடப்பாடி பழனிசாமி கண்டிக்காததால், விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட நாடார் சமூகத்தினர் போஸ்டர்கள் ஓட்டியுள்ளதால் அ.தி.மு.க.,வின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

2021 தேர்தலுக்கு பிறகு சென்னை ஆவடியில் இருந்து விருதுநகர் குடியேறினார் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன். துவக்கத்தில் இவர் எம்.பி., தேர்தலில் போட்டியிட தான் வந்துள்ளார் என கட்சியினர் கூறி வந்த நிலையில், அவர் அதிலும் போட்டியிடாமல், தொடர்ந்து கட்சியினருக்கு உதவிகள் செய்து வந்தார். விருதுநகரில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இவர் 2026 எம்.எல்.ஏ., சீட் கேட்டு நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மார்ச் முதல் வாரம் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிக்காரர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். முந்தி வந்ததால் அறைந்து விட்டதாக கட்சியில் கூறினாலும், பாண்டியராஜனுக்கு அந்த தொண்டர் சால்வை அணிவித்த கோபம் தான் காரணம் என கூறப்பட்டது.
மறு நாள் குறுநில மன்னன் போல நடந்து கொள்வதாக பாண்டியராஜன் பேசிய ஆடியோ வெளியான நிலையில், ஆம் நான் குறுநில மன்னன் தான் என ராஜேந்திர பாலாஜி கட்சியினர் கூட்டத்தில் பேசினார்.
இந்நிலையில் இருதரப்பு மோதல் அதிகமானது. நேற்று முன்தினம் நடந்த உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி, ராஜேந்திர பாலாஜியை கண்டித்ததாக கூறுகின்றனர். ஆனால் பங்கேற்ற கட்சியினர் மறுக்கின்றனர். நேற்று காலை நாடார் சமூகத்தின் சில அமைப்புகள் அமைச்சருக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதில் நாடார் சமூக மக்களை பேசும் உனக்கும், உன் கட்சிக்கும் எங்கள் ஓட்டு வேண்டுமா என்ற வகையில் எச்சரிப்பது போன்றிருந்தது.
இது அரசியல் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு நிற்காமல், அ.தி.மு.க.,வினரை குழம்ப செய்துள்ளது. இந்நிலையில் நான் எங்கே பாண்டியராஜன் பற்றி பேசினேன் என சென்னையில்பதிலளித்துள்ளார். ராஜேந்திர பாலாஜி .இருமுறை போட்டியிட்டு வென்ற சிவகாசி தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் இது போல போஸ்டர் ஒட்டப்பட்டது.