‘வெறும் ஆறு மாசம் மட்டும்தன் பழகினேனா?’ என சீமானை சீண்டி மீண்டும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி!
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் அந்த வழக்கு தற்போது வீரியம் எடுத்துள்ளது. அதாவது சீமான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து 7 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு மிக தீவிரமானது என்று கூறியதோடு 12 வாரத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேற்று சீமான் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பிறகு பேசிய சீமான் அந்த பெண்ணுடன் வெறும் ஆறு ஏழு மாதங்கள் மட்டும்தான் பழகினேன். அந்த நடிகை விருப்பப்பட்டு தான் என்னுடன் உறவு வைத்துக்கொண்டார் என்று கூறினார். முன்னதாக வயசுக்கு வந்து குச்சியில் இருக்கும் புள்ளையை தூக்கிட்டு போய் ஏதோ கற்பழித்து விட்ட மாதிரி எல்லோரும் கதறிட்டு இருக்கீங்க. காலேஜ் படிக்கிற புள்ளய தூக்கிட்டு போய் கற்பழித்து விட்ட மாதிரி பேசுறீங்க. கட்டாயப்படுத்தினால் தான் வன்புணர்வு விருப்பப்பட்டு வந்தால் அது வேறு. அந்த நடிகை தன்னுடன் விருப்பப்பட்டு தான் உறவு வைத்தாரே தவிர நான் திருமணம் செய்து கொள்வதாக எந்த வாக்குறுதியும் அந்த பெண்ணுக்கு கொடுக்கவில்லை.
கடந்த 15 வருடங்களாக அந்த பெண்ணை வைத்து என்னையும் என் குடும்பத்தையும் நீங்கள்தான் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறீர்கள் எங்களை அவமானப்படுத்த பார்க்கிறீர்கள் என்றார். முதலில் விஜயலட்சுமி யார் என்று எனக்கு தெரியாது என சீமான் கூறிய நிலையில் பின்னர் விஜயலட்சுமிக்கு 50 உயிரம் ரூபாய் பணம் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் விஜயலட்சுமி தற்போது சீமானுக்கு கண்டனம் தெரிவித்து மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, (சீமானை ஏடாகூடமாக ஒருமையில் பேசினார்) ‘‘என்னதான் உங்க பிரச்சனை என்று பிரஸ்காரங்க கேள்வி கேட்கணுமா. 2023 ஆம் ஆண்டு எதற்காக 50000 ரூபாய் பணம் போட்ட. ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தேன் என்று கூறி எதற்காக என் மானத்தை வாங்கினீங்க. என்னமோ புள்ளைங்க வளர்ந்துடுச்சு அது வளர்ந்திருச்சின்னு சொல்ற. அப்ப எதுக்குடா என்கிட்ட வீடியோஸ் வாங்கின. நீ வீடியோ வாங்குவ நான் வாயை பொத்திட்டு இருக்கணுமா. உன் ஆளுங்க வந்து அந்த வீடியோவை வெளியில் விடட்டுமா என கூறி மிரட்டுவாங்க நான் அதுக்கு சாகனுமா. நீ ஆம்பளையா இருந்தா இப்படி அநாகரிகமா பேசாத. 2008 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 6 மாதம்தான் உன்கிட்ட பழகினேனா.
அப்ப எதுக்கு நான் 2011 இல் வந்து புகார் கொடுக்கப் போகிறேன்.நீயும் உன் ஆளுங்களும் பண்ண டார்ச்சர் தாங்க முடியாம தான் கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்தேன்.நேற்று வரைக்கும் விஜயலட்சுமி யாருன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு இருந்த நேத்துதான் முதன் முதலில் 50,000 பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட. என் அக்காவுக்கு எதற்காக நீ வாழ்த்து சொன்ன. எனக்கு ஐம்பதாயிரம் பணம் போட்டுவிட்டு எதற்காக புருஷன் பொண்டாட்டி என்று சொல்லி பம்புன. இதுக்கெல்லாம் முதலில் பதில் சொல்லு.அதை விட்டுட்டு மீடியா முன்னாடி போய் நின்னுட்டு கேவலம் புடிச்ச பொம்பளன்னு சொல்ற. உன்ன மாதிரி ஒரு துப்பு கேட்ட நாய் கூட வாழ்ந்த பாரு எனக்கு தான்டா கேவலம். நீ கேவலமா பேசினா உன்னை விட கேவலமா பேச எனக்கு தெரியும். மேலும் பெரிய இவன் மாதிரி நல்லவன் மாதிரி பேசாதே’’ என்று வீடியோவில் கூறியுள்ளார்.