மாமல்லபுரத்தில் பிப்ரவரி 26ம்தேதி நடக்கும் த.வெ.க., 2ம் ஆண்டு துவக்க விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, மாமல்லபுரத்தில் பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உட்பட 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, மாவட்ட செயலர்களை வரவழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.
விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு சமீபத்தில் வழங்கியுள்ளது. இந்த பாதுகாப்பை ஏற்றுக்கொண்டு, முதல் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், இன்று (பிப்ரவரி24) த.வெ.க., 2ம் ஆண்டு விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
குழுவில், சி.சூரியநாராயணன் (செங்கல்பட்டு), மோகன் ராஜா (செங்கல்பட்டு), எம்.எஸ்.பாலாஜி (செங்கல்பட்டு), வி.நரேந்திரன் (செங்கல்பட்டு), தீனா (திருப்போரூர்), தியாகு (திருப்போரூர்), ராஜேஷ் (திருப்போரூர்), ரமேஷ் (திருப்போரூர்),
சுசி கணேஷ் (திருப்போரூர்), கே.தேவா (திருப்போரூர்), எஸ்.விஸ்வநாதன் (திருப்போரூர்), ஹேமா (திருப்போரூர்), விஜயதேவி (திருப்போரூர்), புஷ்ப ராஜ் (திருப்போரூர்), பவானி (திருப்போரூர்), கவுதம் (திருப்போரூர்), ஜான் ரமேஷ் (மதுராந்தகம்), கண்ணன் (திருப்போரூர்) ஆகிய 18 பேர் இடம்பெற்று உள்ளனர்.
தவிர, விஜய் கட்சிக்கு வியூக வகுப்பாளர்களை தவிர்த்து, அரசியல் அனுபவம் வாய்ந்த சீனியர்களும் தேவை என்கின்றனர் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!