தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி மற்றும் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுவதற்கு புற்றீசல் போல் பயிற்சி நிறுவனங்கள் முளைத்திருந்தாலும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்திருக்கும் ஜி.டி.என். அகாடமி ஏழை மற்றும் நடுத்தர மாணவ, மாணவிகளின் கலெக்டர் கனவுகளை நனவாக்குவதில் முதலிடம் பிடிக்கிறது.

தமிழகம் மட்டுமின்றி இன்றைக்கு இந்தியாவில் கூட கல்வி வியாபார பொருளாக மாறி ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும், சென்னை தேனாம் பேட்டையில் இயங்கிவரும் ஜி.டி.என். அகாடமி கல்விய வியாபாரமாக்காமல், ஏழை மாணவர்களின் கலெக்டர் கனவை நனவாக்குதில் அந்நிறுவனத்தின் இயக்குநர் சத்தியா கரிகாலன் அதிதீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளும் பயிற்சி கொடுக்கிறார்கள்!

இது பற்றி சத்தியா கரிகாலன் கூறும்போது, ‘‘ பொதுவாக கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஐ.ஏ.எஸ். (யு.பி.எஸ்.ஸி.) படிப்பதற்கு முறையான வழிமுறைகளும், சரியான வழிகாட்டலும் இல்லாமல் தடுமாறி வருகிறார்கள். திறமை இருந்தும் அவர்களால் சாதிக்க முடியவில்லை.

உதாரணத்திற்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். நான் வி.ஏ.ஒ.வாக (கிராம நிர்வாக அதிகாரி) பணியாற்றியபோது என்னுடைய போன் நம்பரை எனது உயர் அதிகாரி ‘கலெக்டர்’ என்றுதான் அவரது மொபைலில் பதிவு செய்து வைத்திருப்பார். காரணம், ‘நான் எப்படியாவது கலெக்டர் ஆகவேண்டும்’ என்ற நோக்கில் முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டல் இல்லாததால் என்னால் கலெக்டர் ஆகமுடியவில்லை.

என்னைப் போல் கிராமப்புறங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் தகுதிகள் இருந்தும், அதனை நிரூபிக்க முடியாமல் போகிறார்கள். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஜி.டி.என். ஐ.ஏ.எஸ். அகாடமி’! உண்மையிலேயே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம். தவிர, எங்களுக்கு கட்டணம் ஒரு விஷயமே இல்லை. எங்களுக்கு மாணவர்களின் திறமைகளை ஒருமுகப்படுத்தி, அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, யு.பி.எஸ்.ஸி தேர்வை எளிதாக எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக் கொடுக்கிறோம். இதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் எங்கள் நிறுவனத்தில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

பொதுவாக யு.பி.எஸ்.சி.யில் 2019 முதல் 2022 வரை தேர்ச்சியாகும் பெண்களின் விகிதாச்சாரம் 25 முதல் 28 சதவீதம்தான் இருக்கிறது. அதே போல் டி.என்.பி.எஸ்.சி.யில் 30 சதவீதம் பெண்களுக்கு ரிசர்வேஷன் இருக்கிறது. ஆனால், யு.பி.எஸ்.சி.யிலும், வங்கி தேர்வுகளிலும் இடஒதுக்கீடு கிடையாது. இதனால் யு.பி.எஸ்.சி.யில் பெண்களின் பங்களிப்பு குறைந்து வருவதாக நான் நினைக்கிறேன். எனவே சமுதாயத்தில் பெண்கள் இன்னும் அதிகளில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெல்வதற்காகவே நிறுவப்பட்ட நிறுவனம்தான் ஜி.டி.என்.’’ என்றார்.

சாதனை படைக்கட்டும் சத்தியா கரிகாலன்..! நாமும் வாழ்த்துவோம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal