கோபிசெட்டிபாளையம் அருகே ல.கள்ளிப்பட்டியில் கால்நடை மருத்துவ மனை வளாகத்தில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்படுத்தும் அரங்கை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியவர்
அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படங்கள் இல்லாததால் கூட்டத்திற்கு செல்லவில்லை என செங்கோட்டையன் கூறியது சர்ச்சையான நிலையில்
நேற்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருந்தார் இது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில் காலையில் கூறிய கருத்திற்கு மாலை அவரே தெளிவாக பதிலை கூறிவிட்டார் எனவும் மேலும் நேற்று அதிமுக தோல்வியடைய சில துரோகிகள் தான் காரணம் என அந்தியூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இது குறித்து அவர் தெரிவிக்கையில், அந்தியூர் தொகுதியை பொருத்தவரை இதுவரை அந்தியூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை தோல்வி அடைந்ததற்கு சில பேர் இந்த இயக்கத்திற்கு துரோகத்தை செய்திருக்கிறார்கள்.
அதை தான் நாம் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் சொன்னேன். அந்த வார்த்தை அந்தியூர் தொகுதிக்கு மட்டும்தான் பொருந்தும் என தெரிவித்துளார். மேலும் நேற்று முன்தினம் கோபியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நேற்று அந்தியூரில் நடைபெற்ற பிறந்த நாள் பொதுக்கூட்டத்திலும் கழக எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிடாதது குறித்து கேட்கையில் பொதுச் செயலாளர் என்று நான் கூறியிருக்கிறேன் என்றும் அவர் பதில் அளித்துள்ளார்