தமிழ்நாடு முழுவதும் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியில் அமர்த்த கூடாது என்று எஸ்பிக்களில் இருந்து ஐஜி வரையிலான காவல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணியில் இருந்தால் அவர்களை வேறு பணிக்கு மாற்றவும் ஆணையிடப்பட்டுள்ளது.