‘‘சாதாரண மக்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரி வரை பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழகம் மாறியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகள் சட்ட ஒழுங்கு குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை மு.க.ஸ்டாலின் விட வேண்டும்’’ என அ.தி.மு.க. கழக மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக மருத்துவரணி சார்பில், புரட்சித்தலைவி அம்மாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, கை கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை,கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செயற்கை கால்களை கழக மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் பா.சரவணன் வழங்கி கூறியதாவது,
‘‘ புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது,ஆனால் இன்றைய நிலைமை தமிழகம் அமளிக்காடாக மாறிவிட்டது.
தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் உள்ளனர். ஆனால் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது, குறிப்பாக 241 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 32 ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுகள், 7 புலன் விசாரணை பிரிவு, 35,000க்கு மேற்பட்ட பெண் காவலர்கள் இப்படி இருந்தும் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து தான் வருகிறது.
இந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ 6,000 மேற்பட்ட கொலைகளும் 57,000க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று உள்ளது, இதையெல்லாம் தடுக்க தவறிய திராணி அற்ற அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. ஆண்டுக்கு ரூ.50,000 கோடி மது விற்பனையை இலக்காக வைத்து செயல்படுவதால் இளைஞர்கள் அதிக அளவில் போதைப் பொருளுக்கு அடிமையை உள்ளனர். மேலும் தமிழகம் அதிக அளவில் போதை பொருள் கடத்தல் தலைமை இடமாக தமிழக மாறிவிட்டது.
கடந்த ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையில் போதைப்பொருள் கண்டறியவும், போதை பொருள் கடத்தலை தடுக்க 53 லட்சத்தில், 35 மோப்ப நாய்கள் வாங்கப்படும் என்று கூறினார் ஸ்டாலின் இதுவரை எத்தனை மோப்ப நாய்கள் வாங்கப்பட்டது என்று கூட தெரியவில்லை?
கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழகத்தில் கோவையில் முதன்முதலாக கார் குண்டு வெடிப்பு சம்பவம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. வேங்கைவயல் பிரச்சனை, திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் பட்டியலின சிறுமியை கொடுமைப்படுத்தியது, சென்னையில் கனிமொழி நடத்திய விழாவில் பெண் காவலரை திமுகவைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது, அருப்புக்கோட்டை அருகே பெண் டி.எஸ்.பி.தாக்குதல், சென்னை அண்ணா நகரில் 10 சிறுமிக்கு பாலியல் தொல்லை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள நாடாக தமிழகம் உள்ளது என்று ஸ்டாலின் தவறான தகவலை கூறுகிறார்.
தற்போது கூட காவல்துறை உயர் அதிகாரி கல்பனா நாயக் தன்னை கொலை முயற்சி செய்ய முயற்சி செய்ததாக கூறினார் இதற்கு அமைச்சரோ பர,பரபிற்காக பேசுகிறார் என்று அதை திசை திருப்பினார் . சாதாரண மக்கள் முதல், போலீஸ் உயர் அதிகாரி வரை பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழகம் மாறிவிட்டது ,கடந்த நான்கு ஆண்டுகள் சட்ட ஒழுங்கு குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை ஸ்டாலின் விட வேண்டும்’’ என அதில் கூறினார்.