தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து மோதல்கள் தொடர்ந்த நிலையில், ஆளுநரை திரும்பப் பெற உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்தது.
அரசியலமைப்பு நடைமுறைக்கு புறம்பாக உள்ளது எனக்கூறி ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆளுநர் & அரசு தொடர்பாக பிரச்னைகள், முரண்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பித்துவருகிறது.
எனவே இம்மனுவை ஏற்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளார்.