அதிமுக உள்கட்சி விவகாரம் பற்றி விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தேர்தல் ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் தெரிவித்த நிலையில், வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.