கடந்தாண்டில் வெறிநாய் கடித்ததில் 4.85 லட்சம் பேர் பாதித்து தமிழக முதலிடம் பிடித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 26 பேர் பலியாகியள்ளனர். காரணம் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்’ என தமிழக அரசின் மீது பகீர் புகாரை கிளப்பியிருக்கிறார் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன்.

இது தொடர்பாக டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டிலும் வெறிநாய்க்கடித்து 59,000 ஆயிரம் பேர் இறக்கின்றனர், இதில் இந்தியாவில் 20,000 பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதில் தமிழகம் தான் அதிக அளவில் வெறிநாய் கடிக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படதாக செய்திகள் வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் வெறிநாய் கடித்து 4.43 லட்சம் பாதிப்படைந்தனர்,இதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு வெறிநாய்க்கடித்து 4.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரையில் 12,024 பேரும், தஞ்சையில் 24,038 பேரும், சேலத்தில் 39,011 பேரும், திருச்சியில் 23,908 பேரும், புதுக்கோட்டையில் 21,490 பேரும், சென்னையில் 11,704 பேரும், கோவையில் 14,453 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் கடந்த மதுரையில் மூன்று ஆண்டுகள் மட்டும் 26 பேர் வெறிநாய்க்கடித்து ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு பலியாகி உள்ளார்கள்
குறிப்பாக கடந்த 2024 & -2025 நிதிநிலை அறிக்கையில் தெருவில் சுற்றிவரும் வெறிநாய்களின் இனப்பெருத்தை கட்டுப்படுத்தும் வகையில் 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது, ஆனால் அந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை?
ஆனால் தெருநாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது சென்னையில் மட்டும் 2 லட்சம் தெருநாய்கள் உள்ளது தமிழகத்தில் ஏறத்தாழ 20 லட்சம், தெருநாய்கள் உள்ளதாக தெரிகிறது கடந்த ஆண்டு காட்டிலும் தற்பொழுது கூடுதலாக தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மருத்துவமனைகளில் வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் இருப்பு குறைவாக தான் உள்ளது, இன்றைக்கு இந்தியாவிலே வெறிநாய் கடித்து பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
எப்போதும் தமிழகம் முதலிடமாக உள்ளது என்று முதலமைச்சர் மார்தட்டுகிறார், ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியில், மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை, ஆனால் மக்கள் பாதிப்பில் தமிழகம் முன்னேற்றமாக உள்ளது, எப்போதும் போல ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இனிமேலாவது விழித்துக் கொண்டு இந்த அவல நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்’’ என்று அதில் கூறியிருக்கிறார்.