தமிழக அரசியல் களத்தில் இளம் அரசியல் தலைவர்களான அண்ணாமலை மற்றும் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கிறது. அவர்களின் முன்னெடுப்புக்களை வரவேற்போம் என தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்.

இது தொடர்பாக மருது அழகுராஜ தனது வலைதளப் பக்கத்தில் ‘சபாஷ்..!’ என்ற தலைப்பில், ‘‘டங்ஸ்ட்டன் சுரங்கம் திட்டத்தை எதிர்த்து போராடுகிறஅரிட்டாபட்டி மக்களை சந்தித்து அண்ணாமலை அத் திட்டம் வராது என்கிற நம்பிக்கையூட்டலை கொடுத்தார் என்றால்…
தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமானநிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து போராடுகிற மக்களை சந்திக்க பரந்தூருக்கே செல்ல அவர் திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
எளிய மக்களது வாழ்விடம் தேடிச் சென்று அவர்களது இன்னல்களை அறிந்து அவர்களுக்கு உதவுகிற இவை போன்ற தொண்டூழியங்களை கட்சி பேதங்கள் கடந்து வாழ்த்தி வரவேற்ப்போம்..!’’ என பதிவிட்டிருக்கிறார்.
2026 தேர்தல் களம் அண்ணாமலை, விஜய், உதயநிதி போன்ற இளம் தலைவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எடப்பாடியார் போன்றோரின் ஆதிக்கம் அந்தளவிற்கு இருக்காது என அடிக்கடி கூறிவந்தவரும் மருது அழகுராஜ்தான்!