கனிமொழியின் பிறந்தநாளான இன்று (ஜனவரி 5) சென்னை மாநகரில் ‘சமூக நீதியே!’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்தான் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கனிமொழி பிறந்த நாளான இன்று ஜனவரி 5ம் தேதி தமிழகம் முழுவதிலும் இருந்துதொண்டர்கள் அதிகாலை முதலே சி.ஜ.டி. காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு வரத் தொடங்கினர். வீட்டிற்கு வந்த அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. அனைவரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் கனிமொழி!

குறிப்பாக தி.மு.க. மகளிர் அணி சார்பில் கனிமொழியின் பிறந்த நாளுக்கு சிறப்பான முறையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், இந்த வருடம் கனிமொழியின் பிறந்த நாளுக்கு ஏராளமான நிர்வாகிகள் வெளியூர்களிலிருந்து வந்திருந்தனர். எப்படியாவது கனிமொழியை வைத்து சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் அதீத ஆர்வம் காட்டினர். காரணம், அண்ணன் ஸ்டாலினிடம், தங்கை கனிமொழி நல்ல உறவில் இருப்பதால், இம்முறை எப்பாடியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என சிலர் முட்டி மோதி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞரும், கனிமொழியின் தீவிர ஆதரவாளருமான தங்க கோபிநாத், சென்னை மாநகர் முழுவதும் ‘சமூகநீதியே!’ என ஒட்டியுள்ள போஸ்டர்கள்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal