அதிமுக ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவரணி தலைவராக மாற்றப்பட்டுள்ளார். ஐடி விங் புதிய தலைவராக கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக செயல்படாமலும், உள்குத்து அரசியலில் ஈடுபட்டு சொந்தக் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்த மா.செ.க்களையும் எடப்பாடி பழனிசாமி மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மாணவர் அணி செயலாளர் பொறுப்பு வகிக்கும் எஸ்.ஆர். விஜயகுமார், துணை செயலாளர் கோவிலம்பாக்கம் சி. மணிமாறன், அதிமுக ஐடி விங் தலைவராக உள்ள சிங்கை ராமச்சந்திரன், இணைச் செயலாளராக உள்ள கோவை சத்யன் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மாணவர் அணி செயலாளராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப் படுவதாகவும், அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமிக்கப் படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக எஸ்.ஆர். விஜயகுமாரும், ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக கோவிலம்பாக்கம் சி. மணிமாறனும் நியமிக்கப்பட்டுளளனர்.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி ஐ.டி.விங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அடுத்ததாக இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ. வீதம் நியமிக்க இருக்கிறாராம். தவிர, செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்றி, அவர்களுக்கு மாநில அளவில் பொறுப்பு அறிவிக்க இருக்கிறாராம். அதே சமயம் துடிப்புடன் செயலாளற்றும் இளைஞர்கள் பலருக்கு மா.செ.வாய்ப்பு காத்திருக்கிறது என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal