தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். அந்த வகையில் ஐதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த ரசிகையின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் வழங்கினார் அல்லு அர்ஜுன். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடர்ந்த சிக்காட்பள்ளி போலீசார். அவரை கைது செய்துள்ளனர். இன்று ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal