‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவை தொல் திருமாவளவன் திடீரென்று புறக்கணித்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்த நிலையில்தான் அரசியல் விமர்சகரும், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘‘#காலமும் #காரணமும்’’ காரணம் என்ற தலைப்பில் பதிவிட்ட பதிவுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது மருது அழகுராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ‘காலமும்… காரணமும்…!’’ என்ற தலைப்பில்,
‘‘அம்பேத்கர் குறித்த விகடன் பதிப்பகத்து நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடும் நிகழ்வில் திருமா கலந்து கொள்ளாது போனாலும்…
அந்நிகழ்வில் விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொள்கிறார் எனும் போது…
திமுக கூட்டணியில் இருந்து திருமா பாதியளவு விலகிவிட்டார் என்பதே பொருளாகும்…
மீதிக்கான காலத்திற்கும் காரணத்திற்கும் அவர் காத்திருக்கிறார் என்பது தான் நிஜம்..!’’ என பதிவிட்டிருக்கிறார்.