தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாள் நேற்று கோலகலமாக தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது.
கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள் என துணை முதல்வருக்கு ஏராளமானோர் பிறந்த நாள் பரிசு கொடுத்தாலும், இளைஞரணி சார்பில் தூத்துக்குடி எஸ்.ஜோயல் கொடுத்த ‘வீரசிவாஜியின் வீரவாள்’ தான் பேசும் பொருளாக அமைந்திருக்கிறது.
இந்த வீரவாள் குறித்து நாம் விசாரித்தபோது, ‘‘வீரசிவாஜியின் வெற்றியின் அடையாளமாக திகழ்வது அவரது வீரவாள்தான். இப்போதும் இந்த வீரவாள் மும்பையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த வீரவாளை நேரில் பார்த்து உருவாக்கப்பட்டதுதான் உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கப்பட்ட வீரவாள்.
அதாவது, 41 இன்ச் நீளத்தில், சுமார் 5 கிலோ எடையில் மராட்டிய மன்னர் வீரசிவாஜி கையில் வைத்திருக்கும் வாளைப் போலேவே உருவாக்கியிருக்கிறார் எஸ்.ஜோயல். அந்த வீரவாளில் மாராட்டிய சாம்ராஜ்ய சின்னத்திற்கு பதிலாக, தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்டிருந்தது.
வீரசிவாஜியின் வீரத்தின் அடையாளமாக திகழும் இந்த வீரவாள், தமிழகத்தில் வரும் 2026ல் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் தி.மு.க.கை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் விதமாக உதயநிதிக்கு வழங்கப்பட்டது’ என்கிறார்கள்.