இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி விவகாரத்துப் பெறப்போவதாக அறிவித்த தகவல்தான் தேசிய அளவில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார்.

சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். சட்ட ரீதியாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். வாழ்வில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலியின் காரணமாக பிரிவு முடிவை எடுத்ததாக சாய்ரா விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானு தம்பதியருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில் விவாகரத்து.. இரண்டு தரப்பிற்கும் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள்.. பிரிவினைகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததே இந்த பிரிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் திருமண உறவு வெளியே சுமுகமாக இருந்தாலும் உள்ளே நிறைய மனக்கசப்பு இருந்துள்ளது.

இரண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைந்துள்ளது. அதோடு ஏ ஆர் ரகுமான் பெரும்பாலும் அதிக நேரத்தை சினிமா பணியில் கவனம் செலுத்தி உள்ளார். இதனால் அவரால் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியவில்லை. முக்கியமாக சமீபத்தில் அதிக அளவில் படங்களை கமிட் செய்துள்ளார். இதன் காரணமாக இரண்டு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஏஆர் ரஹ்மான் – சாய்ரா பானுவின் மகன் ஏஆர் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 வார்த்தைகளில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘இந்த நேரத்தில் எங்களின் வாழ்க்கையின் தனிப்பட்ட உணர்வுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். உங்களின் புரிதலுக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் நடந்த பெரிய சண்டைதான் இவர்களின் விவாகரத்திற்கு முக்கியமான காரணமாக மாறிவிட்டது என்கிறார்கள். அதன்பின்பே இவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கு முன் தங்கள் மகள்கள், மகன் ஆகியோருடன் ஆலோசனை செய்து அதன்பின்பே பிரியும் முடிவை எடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் சமீபத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். இதில் ஜிவி பிரகாஷ் குமார் யார் என்றால் ஏஆர் ரஹ்மானின் உடன்பிறந்த சகோதரியின் மகன் ஆவார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal