தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் விரைவில் சட்டமன்றத் தொகுதிவாரியாக சென்று தொண்டர்களை சந்திக்க இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது: ‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சியை அமைக்க கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன், கடுமையாக பாடுபட வேண்டும்.
இந்த மாதம் நடைபெற உள்ளவாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான முகாம்களில் கட்சியினர் பங்கேற்று, விடுபட்ட பெயர்களை சேர்க்கவும், திருத்தம் செய்யவும் உதவ வேண்டும். தலைவர் விஜய் விரைவில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகச் சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
தவெக தொடங்குவதற்கு முன்பாகவே உள்ளாட்சித் தேர்தலில் 127 இடங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். தற்போது கட்சி தொடங்கப்பட்டுள்ளதால், அனைத்து தேர்தல்களிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்’’ இவ்வாறு அவர் பேசினார்.