தமிழ வெற்றிக் கழக மாநாட்டில் பட்டாசு வெடிக்க போலீசார் திடீர் தடை போட்டிருப்பதுதான் மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் வருகிற 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தற்போது மாநாட்டுக்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மின்விளக்குகள் மற்றும் மாநாடு நடைபெறும் இடத்தில் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 300-க்கும் ஏற்பட்ட கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறையினர் மாநாடு நடைபெறும் இடத்தில் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதாவது மாநாடு நடைபெறும் இடத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் யாரும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று தற்போது மேலிடம் உத்தரவு போட்டுள்ளது. மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் மாநாடு நடைபெறும் நிலையில் அன்றைய தினம் பட்டாசுகளை மாநாடு நடைபெறும் இடத்தில் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.