‘‘முதலமைச்சராக அறநிலையத்துறை நிகழ்ச்சியில்தான் அதிகமாக கலந்து கொள்கிறேன்’’ என அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

‘‘எல்லா துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். 3 ஆண்டுகளில் 2226 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தியுள்ளோம். 10238 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் வல்லுநர் குழு அமைத்தோம்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.6792 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டுள்ளோம்’’ எனவும் கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal