திருச்சி மாவட்டம் துறையூர் இமயம் கல்லூரியில் முன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி திருவிதா ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் உலக சாதனை படைத்திருக்கிறார்.

சிவங்கை மாவட்டம் காணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவிதா. இவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இமயம் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மீது ஆதீத ஆர்வம் காரணமாக தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் சேர்ந்து ஏ.ஐ. தொழில் நுட்ப பாடம் பயின்றார்.

இந்த நிலையில் ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் 5 லட்சம் பெண்கள் பங்கேற்றனர். இதில் தேர்வான 46 ஆயிரம் பெண்களில் திருவிதாவும் ஒருவர். ஜாக்கியை என்ற தொழில் நுட்பத்தை 24 மணி நேரத்தில் உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி கல்லூரி தாளாளர் பெரியண்ணன் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

உலகசாதனை படைத்த மாணவி திருவிதா பேசும்போது, ‘எனக்கு ஏ.ஐ. தொழில் நுட்பம் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. இதனால், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்றேன். இதில் வெற்றி பெற்ற 46 பெண்களில் நானும் ஒருவர். எனது இந்த வெற்றிக்கு காரணம், முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரி தாளார் மற்றும் எனது பெற்றோர்’’ என்றார்.

மாணவியின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal