தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக, கால்நடைத்துறை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • கூடுதல் தலைமை செயலாளர் கோபால், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமனம்.
  • தமிழக மின்சாரத்துறை தலைவராக இருந்த ராஜேஷ் லகானி, வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம்.
  • வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் சுந்தரவல்லி கல்லூரி கல்வித்துறை ஆணையராக நியமனம்.
  • பொதுத்துறை இணை செயலாளர் விஷ்ணு சந்திரன், வேலைவாய்ப்பு துறை இயக்குனராக நியமனம்.
  • சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கைத்தறி, ஜவுளித்துறை செயலாளராக நியமனம்.
  • போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் லில்லி, சமூக நலத்துறை ஆணையராக நியமனம்.
  • சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் லலிதா, ஜவுளித்துறை இயக்குனராக நியமனம்.
  • திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் பொதுத்துறை துணை செயலாளர் ஆக நியமனம்
  • தமிழக மின்சார வாரிய தலைவராக நந்தகுமார் நியமனம்
  • கைத்தறி துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழக சிறு தொழில் வளர்ச்சி கழக தலைவராக நியமனம்
  • தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழக தலைவர் ஸ்வர்னா, ரூசா திட்ட மாநில இயக்குனராக நியமனம்
  • நிதித்துறை இணை செயலாளர் பிரதீவ் ராஜ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம்
  • கலால் துறை ஆணையராக முன்பு பதவி வகித்த, ஜெயகாந்தன் தமிழக நீர்நிலை மேம்பாட்டு திட்ட நிர்வாக இயக்குனராக நியமனம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal