நாமக்கள் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அ.ம.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளை தி.மு.க. தட்டித் தூக்கியிருப்பதுதான் தங்கமணியை தடுமாற வைத்திருக்கிறது.

நாமக்கல் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர்எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் முன்னிலையில் திருச்செங்கோடு அதிமுக (ஓ.பி.எஸ். அணி) தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அமமுகவை சேர்ந்த திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பிரபு ஆகியோர் தலைமையில் 14 பெண்கள் உட்பட 112 பேர் திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் அவர்கள் ஏற்பாட்டில் திமுகவில் இணைந்தனர்.

புதிதாக திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று சால்வை அணிவித்து மாவட்ட கழக செயலாளர் வாழ்த்து தெரிவித்தார். திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைப்படி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுவாக ஓ.பி.எஸ். அணி மற்றும் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைவதுதான் வழக்கம். ஆனால், நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் தி.மு.க.வில் இணைந்திருப்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., டி.டி.வி. மூவருக்கும் அதிர்ச்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal