ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை பற்றி ஆய்வு செய்தது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலாக வாய்ப்பிருக்கிறது.