பேரறிஞர் அண்ணாவால் 1949ம் தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா கொண்£டாப்படுகிறது. 1958 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் நாள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக திமுக வலுப்பெற்றது. உதயசூரியன் அந்தக் கட்சியின் சின்னமானது.

தி.மு.க. பவளவிழாவையொட்டி இன்று மாலை நந்தனத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது. முப்பெரும் விழாவையொட்டி பவள விழா நாயகர் ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ‘கழகம்… எங்கள் கழகம்..!’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்,

“கழகம்… எங்கள் கழகம்…”
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற எங்கள் கழகம்
எல்லோருக்கும் எல்லாம் எண்ணும் எங்கள் கழகம்
சமூகநீதிக்கு சகாவரம் தந்த எங்கள் கழகம்
சமத்துவம் பழகும் எங்கள் கழகம்
கலக்கமில்லா எங்கள் கழகம்
களங்கமில்லாத எங்கள் கழகம்
கடமை கண்ணியம் கட்டுபாடு
கட்டுகோப்பான எங்கள் கழகம்

அண்ணா கண்ட எங்கள் கழகம்
கலைஞர் கட்டி காத்த கழகம்
எங்கள் தங்க கழக தலைவர் தளபதியால் உச்சம் தொடுகிறது எங்கள் கழகம்
உறுதி படைத்த உதயம் தம்பி காக்கும் கழகம்

மதராஸ் மகாணம் தமிழ்நாடாக்கியது எங்கள் கழகம்
தமிழை செம்மொழியாக்கிய எங்கள் கழகம்
நலிந்தோர் வலுவடைய செய்த எங்கள் கழகம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எங்கள் கழகம்
கருவறை அனைவருக்கும் ஒன்றே என உணர்த்திட எங்கள் கழகம்

முரசொலியை படித்துவிட்டு
செவிநிறைய செய்தி கேட்க
வயிறு முட்ட சாப்பிட்னுவிட்டு
பட்டு சீலை கருப்பு சிவப்பு வேட்டி கட்டிகிட்டு
பட்டு பாவாடை, கால் சட்டை போட்டுகிட்டு
கடலை கொறித்து கொண்டு
பவளமல்லி சூடிக்கொண்டு
பவளவிழா காண போகலாம்
நூற்றாண்டு விழா முன்னோட்டத்த பார்கலாம்!

அன்புடன்,
பூங்கோதை ஆலடி அருணா
’’ என பதிவிட்டிருக்கிறார்.

மறைந்த கலைஞரின் தீவிர பக்தர் ஆலடி அருணா, அவரது மகளும் முன்னாள் அமைச்சருமான பூங்கோதையும் கலைஞர் காட்டிய வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிழலில் தொடர்ச்சியாக பயணித்து வருகிறார்.

அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தென்காசி மாவட்ட உடன் பிறப்புக்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் தொடர்ந்து உதவிகள் செய்துகொண்டிருக்கும் பூங்கோதை ஆலடி அருணாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் தென்காசி மாவட்ட மக்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal