தமிழகத்தில் குரூப் 2 தேர்வு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தில் ஆய்வு செய்த பின்னர், அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ‘‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என அவர் கூறியுள்ளார்.