கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஈடுபட்டார். 234/77 ஆய்வுப் பயணத்தின் 181ஆவது ஆய்வை பழனி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொண்டார்.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் அவர்களின் பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பள்ளி அளவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி-கட்டுரைப் போட்டிகளிலும், தமிழ்க்கூடல் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களைப் பாராட்டி நூல்கள் பரிசளித்தார். தேசிய மாணவர் படையின் சிறப்பு முகாமில் பங்காற்றிய மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.