ஆளுநர் ஆர்.என்ரவி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா என தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவின் அடுத்தடுத்த சந்திப்புகள்தான் தமிழக பா.ஜ.க.வில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில். அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போல எஸ்ஆர் சேகர், கனகசபாபதி, சக்கரவர்த்தி, ராம.சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு பாஜகவில் பழைய மூத்த நிர்வாகியான எச். ராஜா கை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. உதாரணமாக பேட்டி அளித்த எச். ராஜா, ‘‘பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு அல்ல; அது இந்து விரோத மாநாடு; முருகனை வைத்து தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்க மாட்டார்கள்’’ என்று பேட்டி அளித்துள்ளார். இத்தனை நாட்களாக பெரிதாக பேட்டி கொடுக்காமல் அமைதியாக இருந்த எச். ராஜா திடீரென இப்படி பேட்டி அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

அண்ணாமலை இருந்தவரை எச். ராஜா பெரிதாக எதுவும் பேட்டிகள் கொடுக்கவில்லை. சர்ச்சையாக பேசவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், எச்.ராஜா இப்போது பேசி உள்ளார். அதோடு சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவியை கூட எச். ராஜா சந்தித்தார். அண்ணாமலை இல்லாத நேரத்தில் இந்த சந்திப்பும் கூட கவனம் பெற்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் கட்சியை தமிழ்நாட்டில் ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் எச் ராஜா டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்தி உள்ளார். தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள், தமிழ்நாடு பாஜகவில் நிலவும் அரசியல் ரீதியான பிரச்சனைகள், கட்சியின் நிலைமை, அரசியல் ரீதியாக கட்சிக்குள் மோதல்கள் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு தமிழ்நாடு உள்துறை நிலவரம், அதாவது சட்ட ஒழுங்கு குறித்தும் எச். ராஜா புகார்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எச்.ராஜா மேற்கொண்டு உள்ள இந்த நடவடிக்கை பாஜக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அவர் எடுத்து வைக்கும் சில அடிகள் கட்சிக்கு உள்ளேயே விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

எச்.ராஜாவிற்கான நியமனத்தில் அண்ணாமலை தலையீடு இருந்ததாக கூறப்பட்டாலும், அண்ணாமலை இது தொடர்பாக இதுவரை எந்த விதமான போஸ்ட்டையும் செய்யவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன.

பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாட்களுக்கு முன் லண்டன் சென்றார். எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் சென்றார்.

‘அண்ணாமலையால்தான் பா.ஜ.க. & அ.தி.மு.க. கூட்டணி முறிந்தது’ என அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், எச்.ராஜாவின் சந்திப்பு கூட்டணியிலும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal