கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை நேற்று கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் இருந்து, தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்த நிலையில், தற்போது அவரது சகோதரர் சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாக முகாந்திரம் இருப்பின் இவர்களை கைது செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கரூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal