கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சமீபத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் (100 ரூபாய்) நாணயத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரை புகழ்ந்து பேசியதுதான் தமிழக பி.ஜே-.பி.யினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கலைஞர் நுற்றாண்டு விழா நாணய வெளியீடு நிகழ்ச்சி தொடர்பாக தனது பழைய ஞாபகத்தை மிகவும் நெகிழ்ச்சியாக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா.
‘‘மூன்று நாட்களுக்கு முன்பு என் அலைபேசியில் சித்தப்பா. என் தந்தையின் போல நுண்ணறிவும் எல்லையில்லா பாசமும் கொண்ட இளைய தம்பி போராசிரியர் வை.செல்லமுத்து. “கோதை நேற்று கலைஞர் நூற்றாண்டு விழா எப்படி இருந்தது. டி.வி.யில் முழு நிகழ்ச்சியை பார்த்தேன் எனக்கு ஒரு நாணயம் கிடைத்தால் பெற்று தரவும்.
நம் வீட்டில் மூன்று தலைமுறைக்கு மணவிழா தலைமையேற்று நடத்தியவர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதில் என் திருமணம்தான் முதலாவது என நன்றியுணர்வோடும் பெருமிதித்துடன கூறினார், அதிகம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தாதவர் என் சித்தப்பா.
எனக்கு தெரிந்து என் சித்தப்பா அப்பழுக்கற்ற நேர்மை மிகுந்த கூர்நோக்கு சிந்தனையாளர். யாரிடமும் எதையும் கேட்கமாட்டார் . என்னிடம் முதல் முறையாக நாணயம் கேட்ட போது எப்படியாவது சித்தப்பாவிற்கு வாங்கி தரவேண்டும் என நினைத்தபோது மறுநாள் முரசொலியில் அறிவாலயத்தில் நாணயம் கிடைக்கும் என்ற அறிவிப்பு வந்த செய்தியை கண்டு அன்றே என் சித்தப்பாவிறகு வாங்கி அனுப்பினேன். நாணயத்தை கண்டு மகிழும் சித்தப்பாவும் என் தங்கை பூங்குழலியும்!’’ என்று தனது வலை தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவோடு தான் சிறுவயதில் கலைஞர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பழைய ஞாபகங்களை நினைவு கூர்ந்து தனது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் திராவிடத்தை உயிர் மூச்சாக சுவாசிக்கும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!