‘‘உதயநிதி துணை முதல்வரானால், தமிழக மக்களுக்கு இன்னும் தீங்கு அதிகமாகும்’’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருப்பதுதான், தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்முருகன், ‘‘பிரதமர் மோடி வரலாற்று மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று சிறப்புமிக்க ஆட்சி அமைத்துள்ளார். நாட்டை பிரதமர் மோடி வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் மிக அதிகம்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியகொடி ஏற்றாததை மிகப்பெரிய தவறான செயலாக நான் பார்க்கிறேன். இதை பா.ஜ., வன்மையாக கண்டித்து உள்ளது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. மாநில அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’’இவ்வாறு அவர் கூறினார்.
‘‘உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்று தி.மு.க., அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்கிறார்களே?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘’ இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் தமிழகத்தின் துணை முதல்வராக வருவதால், ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது. தமிழகத்தின் அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு என்னென்ன தீங்கு செய்து வருகிறார்களோ அது இன்னும் அதிகமாகும்’’ என எல்.முருகன் பதில் அளித்தார்.
ஜார்கண்ட்டில் நடப்பதை தமிழகம் பார்க்காமலா இருக்கும்..?