தொடர் விடுமுறை காரணமாக, சென்னை டூ தூத்துக்குடி செல்வதற்கு விமான கட்டணம் ரூ,4,301ல் இருந்து ரூ.10,796ஆக உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரை செல்வதற்கு கட்டணம் ரூ.4,063ல் இருந்து ரூ.11,716 ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்றும், நாளையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சுதந்திர தினம்(ஆகஸ்ட் 15) மற்றும் சனி(ஆகஸ்ட் 17), ஞாயிறு(ஆகஸ்ட் 18) விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வதால் விமான கட்டணம் இருமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலத்துக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.

  • சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.4,301-ஆக இருந்த விமான கட்டணம் இன்றும், நாளையும் ரூ.10,796 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4,063ஆக இருந்த விமான கட்டணம், இன்றும், நாளையும் கட்டணம் ரூ.11,716ஆக அதிகரித்துள்ளது.
  • அதேபோல் கோவைக்கு விமான கட்டணம் 5,349 ரூபாயாகவும், திருச்சிக்கு 7ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.உள்நாட்டு விமான கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக டில்லி, மும்பை, ஆமதாபாத் செல்லும் விமானங்களில் முதல் வகுப்பு கட்டணம் 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal