முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் -ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு விசாரித்தது வருகிறது. அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரியிருந்தார். இந்த மனு காலையில் முதலில் விசாரிப்பதாக இருந்தது. பிறகு பிற்பகலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal