தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் துணை காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் நியமிக்கப்ட்டுள்ளார். சென்னை நுண்ணறிவு பிரிவு ஆணையராக ராமமூர்த்தி உள்ள நிலையில், மற்றொரு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக சுஜித் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட எஸ்பியாக நிஷா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக ஆதர்ஷ் பச்சேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட எஸ்பியாக மதிவரணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக பிரபாகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட எஸ்பியாக மகேஸ்வரன் ஐபிஎஸ்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal