தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு, பட்டி தொட்டியெங்கும் பா.ஜ.க.வைப் பற்றி பேசவைத்தார். இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரது பார்வையையும் பா.ஜ.க. பக்கம் திருப்பினார்.
ஒரு கட்சியின் மாநில தலைவராக இருப்பவர்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியுடன் ‘புரிந்துணர்வில்’ இருப்பது வழக்கம். ஆனால், ஆளும் கட்சியை கடுமையாக விமசனம் செய்ததோடு, கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வையும் ‘தில்’லாக எதிர்த்தவர் அண்ணாமலை. இந்த நிலையில்தான் அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்? என்ற கேள்விக்கு ‘நறுக்’கென்று பதில் அளித்திருக்கிறார் அண்ணாமலை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து பல நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். கடந்த வாரம், சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார் என்று நீக்கப்பட்டார்.
அதன்பின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார், என்று அண்ணாமலை அறிவித்தார்.
இதற்கு இடையில் இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலை படிக்க உள்ளார். இது தொடர்பாக பிரபல தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை செல்கிறார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலைக்கு இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார். தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அவர் தலைவர் பதவியில் இருந்தே கூட மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது தலைமை பதவி மாற்றம் தொடர்பான கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.
‘‘அண்ணா இன்னும் டைம் இருக்கு.. நான் ஒரு அடிப்படை தொண்டன்.. அதன்படியே செயல்படுவேன். கட்சி தலைமைதான் முடிவுகளை எடுக்கும். கட்சியின் வளர்ச்சிக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். அதற்காகவே .. அதை நோக்கியே செல்கிறோம்’’ என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.