அம்பிகா தனது கணவரை விவாகரத்து செய்த பின் நடிகர் ரவிகாந்தை 2-வது திருமணம் செய்ததாக தகவல் வெளியான நிலையில், ரவிகாந்த் இந்த தகவலை மறுத்துள்ளார்.

1980களில் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்ந்திய சினிமா முழுவதுமே நடிகை அம்பிகா கோலோச்சி வந்தார். 1976 முதல் 1989 வரை தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தார் அம்பிகா. இவரின் தங்கை தான் நடிகை ராதா. அம்பிகாவும், ராதாவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் அம்பிகா நடித்துள்ளார். இவற்றில் பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன. அந்த காலக்கட்டத்தில் உச்சத்தில் இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், மம்முட்டி, மோகன்லால், திலீப், ஷங்கர், என்.டி.ராமராவ், கிருஷ்ணா, கிருஷ்ணம் ராஜு, டாக்டர். ராஜ்குமார், அம்பரீஷ் மற்றும் சிரஞ்சீவி என பல தென்னிந்திய உச்ச நடிகர்களுடன் அம்பிகா ஜோடி சேர்ந்து நடித்தார்.

1988-ம் ஆண்டு பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார் அம்பிகா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக 1996-ம் இந்த தம்பதி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்த அவர் தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே அம்பிகா தனது கணவரை விவாகரத்து செய்த பின் நடிகர் ரவிகாந்தை 2-வது திருமணம் செய்ததாக தகவல் வெளியானது. அம்பிகாவின் விக்கிப்பீடியா பக்கத்தில் கூட, அம்பிகாவின் 2-வது கணவர் ரவிகாந்த் என்றும், இந்த ஜோடி 2000-ம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரவிகாந்த் தான் அம்பிகாவின் கணவர் என்ற தகவலை மறுத்துள்ளார். சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ நான் அம்பிகாவின் கணவர் என்று ஒரு வதந்தி பரவியது. நானும் அம்பிகாவும் கிட்டத்த 16 படங்களில் கணவன் மனைவியாக நடித்தோம். நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தோம். இதனால் ஷூட்டிங் செல்லும் போது காரில் ஒன்றாக செல்வோம். இதனிடையே பல சீரியல்களிலும் ரவிகாந்த் நடித்திருந்தார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் தொடரில் முக்கிய ரோலில் நடித்திருந்தா. அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் ஒன்றாக வருவதை பார்த்து புருஷனும், பொண்டாட்டியும் வந்துவிட்டதாக கிண்டலாக சொல்வார்கள். இதுதான் நடந்தது. அம்பிகாவு பாவம். அவர் பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் இருந்தார். படத்திற்காக இங்கு வந்து நடித்து விட்டு செல்வார். இதுதான் உண்மை.. எனவே இணையதளங்கள், சமூக வலைதளங்களில் வரும் தகவலை நம்பி ஏமாறாதீங்க.. உண்மையில் நான் அம்பிகாவை திருமணம் செய்யவும் இல்லை. அவரின் கணவரும் இல்லை.” என்று தெரிவித்தார்.

பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவிகாந்த். பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அவர் பின்னர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாநாடு என வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் நடித்தார். அவர் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே பல சீரியல்களிலும் ரவிகாந்த் நடித்திருந்தார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் தொடரில் முக்கிய ரோலில் நடித்திருந்தா. அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal