மாநிலங்களவையில், நியமன எம்.பி.,க்கள் 4 பேர் ஓய்வு பெற்றதால், பாஜக-வின் பலம் 86 ஆகவும், பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணி 101எம்பிக்களை மட்டுமே கொண்டுள்ளது. இது, மொத்தமுள்ள 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் தற்போதைய பெரும்பான்மையான 113 இடங்களுக்கும் கீழே சென்றுள்ளது.
மாநிலங்களவையின் நியமன எம்.பிக்கள் ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகியோரின் பதவிக்காலம் கடந்த சனிக்கிழமையோடு முடிவடைந்ததை அடுத்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் நான்கு இடங்கள் சரிந்தது. இந்த
நால்வரும் அணிசேரா உறுப்பினர்களாக, ஆளும் கட்சியின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
நியமன எம்பிக்கள் 4 பேர் ஒய்வுபெற்றதையடுத்து, பாஜகவின் பலத்தை 86-ஆகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை 101 ஆகவும் குறைக்கிறது, மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட நிலையில், தற்போதைய பெரும்பான்மையான 113க்குக் இடங்களுக்கும் கீழே உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு மொத்தம் 87 இடங்கள், காங்கிரஸ்க்கு 26 எம்பிக்கள், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்பிக்கள், டெல்லியின் ஆம் ஆத்மி மற்றும் தமிழ்நாட்டை ஆளும் திமுகவுக்கு தலா 10எம்பிக்கள் உள்ளன.
பாஜக அல்லது காங்கிரஸ் உடன் இணையாத கட்சிளான தெலங்கானா முன்னாள் முதல்வர் கே சந்திரசேகரராவின் பிஆர் எஸ் கட்சி, மற்றும் பிற நியமன எம்பிக்கள் மற்றும் சில சுயேட்சை எம்பிக்களும் அடங்குவர்.