‘அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும்’ என அ.தி.மு.க.வில் உள்ள மூத்த தலைவர்களே போர்க்கொடி தூக்கி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக்கட்ட மூவ்தான் தி.மு.க.வையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மீண்டும் கூட்டணி காட்சிகள் மாறும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். முக்கியமாக இந்த வருடமே சில கட்சிகள் அரசியல் ரீதியாக புதிய கூட்டணி நிலைப்பாட்டை எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.

அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளனர். இந்த நெருக்கடியின் விளைவாகவே அரசியல் மாற்றங்கள் ஏற்பட போவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும். மீண்டும் பொதுக்குழுவை கூட்டி அ.தி.மு.க.வின் சக்தியை நிரூபிக்க வேண்டும்.

வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும். இந்த கூட்டணிக்காக எடப்பாடி இறங்கி வர வேண்டும் என்றெல்லாம் அழுத்தங்கள் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியானது. அதாவது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைகளை மீண்டும் கட்சிக்கு உள்ளே கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நெருக்கடியின் விளைவாகவே அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதாவது, எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லும் திட்டத்தில் இருக்கிறாராம். விரைவில் அமித் ஷாவை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. மீண்டும் அதிமுக, – பாஜக கூட்டணி மீண்டும் அமையலாம். பாஜக – அதிமுக கூட்டணி வந்தால்.. சசிகலா,ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க வேண்டிய பிரஷர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்காது.

தற்போது தனக்கு வரும் பிரஷருக்கு டெல்லிதான் காரணம் என்று எடப்பாடி நினைக்கிறாராம். அமித் ஷாவுடன் ஐக்கியம் ஆகிவிட்டால் பிரஷர் வராது என நினைக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. தவிர, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க., பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைந்திருந்தால் குறைந்தது 15 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ள இந்த மானமாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் சில தகவல்கள் சென்றுள்ளதாம். அதன்படி, எடப்பாடி அமித் ஷா பேச்சு விரைவில் நடக்கும். கூட்டணி இறுதி செய்யபட வாய்ப்புகள் உள்ளன என்று தகவல் சென்றுள்ளதாம். திமுக முகாமிலிருந்து எடப்பாடி பக்கம் தாவ பேசி கொண்டிருந்தவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டது. அவர்கள் அதிமுகவிடம் இணைய முடியாது. பாஜக கூட்டணி இருப்பதாக அதிமுக உடன் கூட்டணி வைக்க முடியாது. 2026ல் அதிமுக பாஜக மெகா கூட்டணி அமைக்க உள்ளது. பாஜக உள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்த அதிமுக கூட்டணிக்கு செல்லாது என்று தகவல் சென்றுள்ளதாம்.

இதனால் திமுகவும் கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறதாம். ஆனாலும், தி.மு.க.விற்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம்தான் என்கிறார்கள். இதனால் வரும் நாடகளில் தமிழ்நாட்டில் மீண்டும் கூட்டணி காட்சிகள் மாறும். முக்கியமாக இந்த வருடமே சில கட்சிகள் அரசியல் ரீதியாக புதிய கூட்டணி நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள்.

அரசியல் களத்தில் நிரந்திர எதிரியும் கிடையாது…. நிரந்திர நண்பனும் கிடையாது… பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal