விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்திருந்தாலும், அதிமுகவின் வாக்குகளை பங்கிடுவதில் கட்சிகளுக்குள் போட்டா போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகிறது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவினர் இந்த தேர்தலில் தங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாமகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையும் சில இடங்களில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன். இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை. அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எங்கே சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக ஆதரவு தெரிவிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ரகசியமாக இதில் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிகின்றன. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாமகவினருக்கு வாக்களிக்க கூடாது என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம். கட்சி மாவட்ட, கிளை செயலாளர்களை போனில் அழைத்து அதிமுக வாக்கு பாமகவிற்கு செல்ல கூடாது என்று உத்தரவிட்டு உள்ளாராம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவது 2026ல் பாமகவின் சீட் பேரத்திற்கு வலுசேர்க்கும். அவர்கள் 2026ல் நம்முடன் வந்தால் அதிக சீட் கேட்பார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது. பாமகவின் அரசியல் எழுச்சிக்கு அதிமுக உதவிடக்கூடாது. திமுக எதிர்ப்பு வாக்குகள் எளிதாக பாமகவிற்கு சென்றுவிட கூடாது. மற்ற கட்சிகளுக்கு கூட போகலாம். பாஜக கூட்டணிக்கு செல்ல கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளிடம் பேசி உள்ளாராம்.

இதற்கிடையே, அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் காரணமாகவே எடப்பாடி இப்படி ஒரு கோரிக்கையை வைத்து உள்ளாராம். இதன் மூலம் சீமானுக்கு ரகசியமாக ஆதரவு அளிக்க எடப்பாடி மூவ் செய்து வருகிறாரோ. வெளிப்படையாக இல்லாமல் சீமானுக்கு அதிமுக மறைமுக ஆதரவை வழங்குகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான், நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன். இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை. அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கள்ளச் சாராயத்தை தடுக்க நாங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, நல்ல காரியம் என நாம் தமிழர் கட்சி துணை நின்றார்கள், ஆதரவு தெரிவித்தனர். அவர்களும், உண்ணாவிரதம் இருந்தால், அதிமுகவும் ஆதரவு கொடுக்கும். அதிமுகவை பயன்படுத்தினால் தான் ஓட்டு கிடைக்கும் என முடிவு செய்துள்ளனர். அதிமுக தலைவர்கள் படம் இருந்தால் தான் வாக்கு விழும் என எதிர் அணியினர் நினைப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இது எங்கள் தலைவருக்கான மரியாதை என உணர வேண்டும்’’ என்று பேசினார்.

ஆக மொத்தத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மறைமுகமாக சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு எடப்பாடி பழனிசாமி கண் அசைத்திருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal