மதுபான கொள்கை மோசடி வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது தொடர்பாக பதிலளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மதுபான கொள்கை வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை முதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது. இச்சூழ்நிலையில், கெஜ்ரிவாலை, சி.பி.ஐ., அதிகாரிகளும் கைது செய்தனர். இதனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவால் மனு குறித்து பதில் அளிக்கும்படி எழு நாட்களுக்குள் பதிலளிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை1 7 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.