வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்க மறைமுகப் பேச்சுவார்த்தையை ‘மேலிடம்’ தொடங்கியிருக்கிறது.

2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது. ஆனால் சின்னம் மாறினாலும் வாக்கு சதவிகித ரீதியாக நாம் தமிழர் முன்னேறி உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 8.9 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட 9 சதவிகிதம் வாக்குகள் அவை.

கரும்பு விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த சின்னம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலை அந்த சின்னத்தின் கீழ்தான் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டது. நாம், தமிழர் கட்சியின் நிரந்தர சின்னம் ஆகிவிடும் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் நினைத்தனர். அந்த சின்னம் இல்லாமல் மைக் சின்னத்தில் போட்டியிட்டது அவர்களுக்கு பெரிய சிக்கல் ஆனது. தற்போது நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் சீமான் கேட்கும் சின்னம் கிடைக்கும். அதோடு இல்லாமல் சீமான் அந்த சின்னத்தை அங்கீகாரத்தை இழக்கும் வரை எத்தனை தேர்தல்களுக்கு வேண்டுமானால் பயன்படுத்த முடியும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் முக்கியமாக நாம் தமிழரை பாஜக கூட்டணிக்கு இழுக்க டெல்லி முக்கியமான மாஸ்டர்மைண்ட் ஒருவரை களமிறக்கி உள்ளதாம். சீமானை கூட்டணிக்கு இழுக்க ஒரு தேர்தல் ஆலோசகரை பாஜக பயன்படுத்த உள்ளதாம். அவர் சீமானை கண்டிப்பாக பாஜக கூட்டணிக்கு அழைக்கிறேன் என்று டெல்லிக்கு உறுதி அளித்துள்ளாராம். சீமானை கொண்டு வருவோம். கவலைப்பட வேண்டாம். 2026ல் சீமான் நாம் தமிழர் + பாஜக + பாமக என்பதுதான் என்டிஏ கூட்டணியாக இருக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளாராம்.

இதற்கிடையே சீமான் தரப்பினரோ, ‘தி.மு.க.வுடனும், பா.ஜ.க.வுடனும் அண்ணன் கூட்டணி வைக்கமாட்டார்’ என அடித்துச் சொல்கின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமான் இரண்டாம் இடத்தைப் பிடிப்பாரா? என்ற ஆவலும் அதிகரித்து வருகிறது.

அரசியலில் எதுவும் எந்நேரமும் நடக்கலாம். எனவே சீமானின் முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal