போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தி.மு.க., முன்னாள் நிர்வாகியும்,சர்வதேச போதை கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். அவர், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். அதில், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக கடந்த 26ம் தேதி நடந்த விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஏற்கனவே மணல் விவகாரத்தில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில், ஜாபர் சாதிக்கையும் அமலாக்கத்துறை கைது செய்திருப்பது தி.மு.க.விற்கு மேலும் மேலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal