டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த ஜூன் 20ம் தேதி ஜாமின் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. டில்லி ஐகோர்ட் ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். இந்த மனு இன்று(ஜூன் 24) உச்சநீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal