தமிழகத்தில் பா.ஜ.க,வின் வளர்ச்சி ‘அசுர வளர்ச்சி’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘‘தங்களுடைய குடும்பத்தை தவிர வேறு யாரும் வயநாட்டில் களம் காணக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்துள்ளார். பிரியங்கா போட்டியிடுவார் என்பது தெரிந்த விஷயமே. இது எதிர்பார்த்த ஒன்று தான். தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சி மிகப்பெரியது. அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal