நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தோளில் கை போட்ட காங்கிரஸ் நிர்வாகியை கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அடித்து விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் இதுவரை இரண்டு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. நாளை மூன்றாம் கட்ட தேர்தலானது நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சாரம் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. இதில் கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஹாவேரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றிருந்தார்.

அதிகமான அளவிற்கு பொதுமக்கள் கூடி துணை முதலமைச்சர் டி.கே சிவகுமாரை வரவேற்றனர். காரில் இருந்து இறங்கிய டிகே சிவகுமார் கூட்ட நெரிசலில் சிக்கினார். அப்போது காவேரி நகராட்சி உறுப்பினர் அலாவுதீன் மணியார் டி கே சிவகுமார் தொளில் கை போட்டார். இதனால் ஆத்திரமடைந்த டி கே சிவக்குமார் அலாவுதீன் மணியாரை பளார் என அறைந்தார். இதனை தொடர்ந்து அலாவுதீனை கோபமாக தள்ளி விட்டு சென்றார். இதனால் அருகில் வந்த மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் அலாவுதீன் மணியாரை அடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal