தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொகுதி நிதியை செலவிட்டுள்ள நிலையில் அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவதூறு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பதில் வராததால் இபிஎஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன் என குறிப்பிட்டார்.