பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி பழவேற்காடு காட்டுப்பள்ளி ஒன்றிய சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு சமரசம் பேசி சாலையில் மணல் கொட்டி கவுன்சிலர் சுமித்ரா குமார் போக்குவரத்திற்கு தற்காலிகமாக சீர் செய்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது
By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal